Janu / 2024 ஜனவரி 08 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பகுதியில் இரவுவேளை சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் போதைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அப்பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில்போது, குறித்த பெண் தாய், தந்தை இல்லாத நிலையில், பேத்தியாருடன் தங்கியே வாழ்ந்து வருகின்றதாகவும் அண்மைக்காலமாக ஐஸ் போதைக்கு அடிமையாகி உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, அப்பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எம்.றொசாந்த்
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago