2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

போதைப்பொருளுடன் மூவர் சிக்கினர்

Janu   / 2025 செப்டெம்பர் 16 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை போதை குளிசைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் 18, 29 மற்றும் 21 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட  பொலிஸ் அதிகாரியின் தலைமையில் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 50 கிராம்  மில்லிகிராம் ஹெரோயின், மற்றும் 15 போதை குளிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X