Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில், இன்று (01) காலை, 2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன், 50 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையில் இருந்து பருத்தித்துறைக்கு ஹயஸ் ரக வாகனத்தில் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற போதே, அந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியுடையதென, பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வல்வெட்டித்துறை பகுதியில், இன்று (01) காலை, 25 கிலோகிராம் கேரள கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தக் குற்றச்சாட்டில், விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரை, கேரள கஞ்சாவுடன் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் - பெரியகோவில் வீதிப் பகுதியில், 4 கிராம் 680 மில்லிகிராம் ஹெரோய்னுடன், மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், யாழ்ப்பாணம் பொலிஸாரால், நேற்று (30) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
7 hours ago
8 hours ago