Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
பொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில், மதம்சார் பரப்புரைகளை வழங்கும் நோக்கத்துடன் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட மதச் சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமொன்று, நேற்று (21) மாலை இடம்பெற்றது.
பொன்னாலையில், குறித்த மதத்தைச் சார்ந்த மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார்க் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், வெளி இடத்தில் இருந்து பஸ் ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாக நூற்றுக்கணக்கானோர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இருவர், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்கியது யாரென வினவியிருந்த நிலையில், அனுமதியின்றியே கூட்டம் நடத்தப்படுவதாக, ஏற்பாட்டுக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நோய், பிணிகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான நிகழ்வாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாகவும் அக்குழுவினர் கூறியுள்ள நிலையில், இதற்கு அப்பகுதி இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பலவந்தமாக அவர்களை வெளியேற்றியுள்ளனர்.
பொன்னாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குறித்த குழுவினர், அயல் கிராமமான கல்விளானில் கூட்டத்தை நடத்த முயற்சித்துள்ள நிலையில், அங்கிருந்தும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago