Janu / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். தொண்டைமானாறு - சந்நிதியான் ஆச்சிரமத்தால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை (20) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக கோப்பாய் வைத்தியசாலை பொறுப்பதிகாரி மருத்துவர் சிவஞானம் சிவகணே சிவகோணேஸன் என்பவரிடம் ஐந்து இலட்சத்து அறுபத்தி ஐயாயிரத்து அறுநூறு ரூபாய் (5, 65 600) பெறுமதியான மருத்துவ பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று குறித்த மருத்துவ பொருட்களை கையளித்துள்ளார்.
எஸ்.தில்லைநாதன்

6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago