Niroshini / 2021 ஜனவரி 13 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், யாழ் நகரில் உள்ள திரையரங்கம் ஒன்று, சுகாதார பிரிவினரால், இன்று (13) சீல் வைக்கப்பட்டுள்ளது.
விஜயின் மாஸ்டர் திரைப்படம், இலங்கையில் இன்று (13) அதிகாலை முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டன.
இந்நிலையில், யாழ். நகர் பகுதியில், முதல் காட்சியை பார்க்கவென இன்று (13) நள்ளிரவு முதல் குவிந்த இரசிகர்கள், நகரில் உள்ள திரையரங்கு ஒன்றின் முன்பாக காத்திருந்து, முண்டியடித்து டிக்கெட் கொள்வனவுகளில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த திரையரங்கத்தை சீல் வைத்ததுடன், 14 நாள்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
8 minute ago
20 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
20 Mar 2026
20 Mar 2026