Editorial / 2024 ஜனவரி 26 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்
இந்தியாவின் 75வது குடியரசு தினமான வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் இந்திய தேசிய கொடியை எற்றிவைத்தார்.
இதனை தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டதுடன், ஹிந்தி கற்று வரும் தமிழ் மொழி மாணவிகளின் நடனம் இடம்பெற்றதுடன், இந்திய காவற்படையின் வீரர் ஒருவரின் குடியரசு தின கவிதையும், மாணவியின் கவிதையும் இடம்பெற்றன.
இவ் நிகழ்வில் இந்திய உதவி தூதர அதிகாரி ராம் மகேஸ், தூதர அதிகாரிகள் குடும்ப உறவினர்கள், ஊடகவியாளர்





கள், பொஸிஸார், இராணுவத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.
6 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
30 minute ago