Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.மத்திய பஸ் நிலைய பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 3 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வந்தது. திடீரென ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டதால், யாழ்.நகர் பகுதி வர்த்தகர்கள் பல்வேறு தேவைகளுக்காக நகர் பகுதிக்கு வந்திருந்தோர் அவசர அவசரமாக வீடு திரும்பினார்கள்.
அதனால் யாழ் நகர் பகுதியில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு சன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அந்நிலையில் யாழ்.மத்திய பஸ் நிலையத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான முறையில் கையில் பயண பொதியுடன் ஒருவர் நடமாடியுள்ளார்.
அது தொடர்பில் அங்கிருந்தவர்கள் யாழ்,பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினார்கள். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை விசாரணைக்கு உட்படுத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதுடன், வெளிமாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தமையால் சந்தேகத்தில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
24 minute ago