Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என். ராஜ், எஸ்.நிதர்ஷன்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் யாழ். வணிகர் கழகத்துக்கும் இடையிலான சந்திப்பு, யாழ். வணிகர் கழகத்தில், நேற்று நடைபெற்றது.
இதில் யாழ் வணிகர் கழகத்தின் தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதில், யாழ். வணிகர்கள் தமது குறைகளையும் தமக்கு எற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் உடன் கலந்துரையாடினார்கள்.
அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலங்களில் நடைபாதை வியாபாரத்துக்குத் தடை விதிப்பதற்குரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என சுமந்திரன் அறிவித்திருந்த நிலையில், குறித்த சந்திப்பானது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரதிநிதிகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
36 minute ago
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
47 minute ago