2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யாழில் சில இடங்கள் விடுவிக்கப்படுகின்றன

எம். றொசாந்த்   / 2018 செப்டெம்பர் 03 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம் உள்ளிட்ட சில பிரதேசங்கள் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளதக யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த வேதநாயகன்,

“குடாநாட்டில் பொதுமக்களின் பாவனைக்குரிய சில இடங்களை விடுவிக்குமாறு கோரியிருந்தோம்.  அவ்வாறு கோரிக்கை விடப்பட்ட இடங்களில் நான்கு இடங்களை விடுவிக்க படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

அதனடிப்படையில், மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம், வசாவிளான், குரும்பசிட்டிப் பகுதியிலுள்ள ஓர் கூட்டுறவுச் சங்க கிளைக் கட்டடத்துடன் ஓர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடமும் விடுவிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவித்தல் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியால் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கட்டடங்கள் எம்மிடம் கையளிக்கப்பட்டதும் உடனடியாகவே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்” எனக் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X