Freelancer / 2023 பெப்ரவரி 11 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட ஏழு பேர் வரை சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டதுடன், யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
35 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
42 minute ago
1 hours ago