2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். ஆயருடன் சஜித் சந்திப்பு

Editorial   / 2022 ஜனவரி 12 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் , என்.ராஜ், வி.நிதர்ஷன்

தன்னுடைய பிறந்த தினத்தையொட்டி, வட மாகாணத்துக்கு இன்று (12) விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரீன் பேனாட் ஞானப்பிரகாசத்தை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.

இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில், வடக்கில் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ். மறை மாவட்ட ஆயர், எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 இக்கலந்துரையாடலில், முன்னாள் அமைச்சர் புத்திக பத்திரண, இரான் விக்ரமரட்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 இந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்துரைத்த ஆயர், “நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், தன்னாலான முயற்சியை மேற்கொண்டு  அபிவிருத்தி வேலைகளை செய்து வருகின்றார்.

“நான் மூன்று விடயங்களை அவரிடம் குறிப்பிட்டேன். அதாவது, கல்வி, மீன்பிடி, விவசாயம் இந்த மூன்று துறைகளையும் வடக்கில் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அத்தோடு, இந்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை ஒரு பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரினேன். அதற்கு அவர், அரசாங்கத்தில் இருப்பவர்கள் தான் அதனை செய்ய முடியும் என  தெரிவித்தார்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .