Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 27 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்சன்
யாழ். மாநகர சபைக்குட்பட்ட நெளுங்குளம் - 505 ஆவது குறுக்கு வீதியை மூடுவதற்கு மாநகரசபை எடுத்த முயற்சி மக்களின் எதிர்ப்புக் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
வீதியை மூடுவதற்காக இன்று காலையில் சென்ற மாநகரசபை உத்தியோகத்தர்கள் மக்களின் எதிர்ப்புக் காரணமாக திரும்பிச் சென்றுள்ளனர்.
கடற்கரைக்குச் செல்வதற்கான குறித்த குறுக்கு வீதி யாழ். மாநாகர சபையின் அனுமதியுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு செப்பனிடப்பட்டிருந்தது.
இருந்தும் இவ்வருடம் 2019 ஆம் ஆண்டு நகர அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் குறித்த வீதி மூடப்படவேண்டும் எனத் தெரிவித்து குறித்த பிரதேச மக்களுக்கு யாழ். மாநகர சபையால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, பொதுமக்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த நடவடிக்கையை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதால் வீதியை மூடும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைக்குமாறு யாழ். மாநகர முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நெளுங்குளம் 505 குறுக்கு வீதியை மூடுவதற்கு யாழ்.மாநகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago