Freelancer / 2023 நவம்பர் 14 , பி.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் இதுவரை 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றையதினம் மாத்திரம் எட்டு குடும்பங்கள் அடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/388 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும்,
ஜே/400 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 குடும்பங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/167 கிராம சேவகர் பிரிவில் ஆலயம் ஒன்றிற்கு மேலே அரசமரம் ஒன்று குடைசாய்ந்ததில் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். R
7 minute ago
16 minute ago
26 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
26 minute ago
29 minute ago