Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வாடகை கார் தரித்து நிற்கும் பகுதியில் இன்று காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரையில் கார் ஒன்று தரித்து நின்றுள்ளது.
அதனால் வாடகை கார் உரிமையாளர்கள் அந்த காரின் மீது சந்தேகம் கொண்டு காரின் கண்ணாடி வழியாக காரினுள் பார்த்த போது காரினுள் சில பொதிகள் காணப்பட்டன. அதனால் சந்தேகம் கொண்டோர் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காரினை பார்வையிட்டதுடன், அது தொடர்பில் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு அறிவித்தனர்.
அத்துடன் வைத்தியசாலை வீதியின் ஊடான போக்குவரத்தையும் தடை செய்து வாகனங்களை வேறு வீதிகளின் ஊடாக அனுப்பி வைத்தனர். அதனால் அவ்விடத்தில் ஒருவித பதட்டம் ஏற்பட்டது.
அந்நிலையில் குறித்த காரின் உரிமையாளர் வைத்தியசாலைக்குள் இருந்து வந்து, அது தன்னுடைய கார் என உறுதிப்படுத்தியதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது உறவினருக்கு உதவியாக வைத்தியசாலையில் காலை முதல் தங்கி நிற்பதாகவும் அதனாலேயே காரினை இங்கு தரித்து விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை அவ்விடத்திற்கு வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் காரினை முற்றாக சோதனையிட்டு சந்தேகத்துக்கு உரிய பொருட்கள் காரினுள் இல்லை என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் அங்கிருந்து கலைத்து சென்றனர்.
அதன் பின்னர் வைத்தியசாலை வீதியின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. குறித்த சம்பவத்தால் யாழ்.நகர் மத்தியில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டது.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025