Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
எம். றொசாந்த் / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தக்குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோடு ஒப்பிட வேண்டாம் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கலாம் என்றால், இராணுவத்தரப்பு யுத்தக் குற்றம் புரிந்தமையை ஏற்றுக்கொள்கின்றனரா, அவ்வாறு எனில் யுத்தக் குற்றம் புரிந்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா, குற்றவாளிகளாக இனம் காணப்பட்டனரா, சிறைகளில் உள்ளனரா, இல்லை. அவ்வாறு இருக்க தமிழ் அரசியல் கைதிகளை பலிக்கடாவாக்கா முயல்கின்றனர்.
யுத்த குற்றம் என்பது இராணுவத்துடன் தொடர்புபட்டது. அதற்கு இராணுவ சட்டதிட்டங்களின் கூடாகவோ, சர்வதேச சட்டங்கள் கூடாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அதனை விடுத்து யுத்த குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோட ஒப்பிட வேண்டாம் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
2 hours ago
4 hours ago