Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 18 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வடக்கு வட்ட மேசை' கலந்துரையாடலின் (Northern Province Round Table) இரண்டாவது கலந்துரையாடல், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில், இன்று (18) மாலை 4 மணிக்கு, யாழ். பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது.
வடமாகாணத்தை அபிவிருத்திப் பாதையில் முன்கொண்டு செல்வதற்கு, கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக, ஆளுநரின் எண்ணக்கருவுக்கமைய, இந்த வட்டமேசைக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதில், யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர், 'வடமாகாணத்தின் பொருளாதார எதிர்காலம்' தொடர்பில் உரையாற்றவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இவ்விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதுடன் , இக்கலந்துரையாடலில் ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
4 hours ago