Janu / 2024 ஜூன் 24 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மது விருந்தில் நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலையில் முடிவடைந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் கடந்த புதன்கிழமை (19) அன்று தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்தார்
உயிரிழந்த நபரும் அவரது நண்பர்களும் மது விருந்தொன்றில் கலந்து கொண்டிருந்த போது , நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கதில் , உயிரிழந்த நபர் மற்றுமொருவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
அதில் மற்றயை நபரின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
அப்போது உயிரிழந்த நபரை , அங்கிருந்த இளைஞன் ஒருவன் சம்பவ இடத்தில் இருந்து அழைத்து சென்றதையடுத்து காயமடைந்த நபரை அங்கிருந்த ஏனைய மூன்று நபர்கள் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதன்போது உயிரிழந்த நபர் , வைத்தியசாலைக்கு அழைத்து வந்த நபர்கள் மற்றும் காயங்களுக்கு உள்ளாகிய நபருடன் முரண்பட்ட நிலையில் , அவர்களால் தாக்கப்பட்ட உயிரிழந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் நெடுந்தீவு பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளான நபர் வியாழக்கிழமை (20) அன்று கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூவர் தலைமறைவாகி இருந்தனர்.
தலைமறைவாகியவர்கள், ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மூவரையும் படகில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , அவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துளள்னர்.
எம்.றொசாந்த்
7 minute ago
35 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
35 minute ago
58 minute ago
2 hours ago