Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது, மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்களெனவும் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள் ஆராய வேண்டுமெனவும் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நேற்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருவதாகவும் விமான நிலையத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப்படுமாயின், மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன். அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரவி அதன் ஊடாக ஊடுதளத்தை அமைக்க முடியும் என்றார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு தரப்பினர், விமான நிலைய அபிவிருத்தியின் போது, காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் இப்போது எந்த முயற்சியும் நடைபெறவில்லை. நீங்கள் சொல்வது போல கடலை நிரவி ஓடுதளம் அமைப்பது தொடர்பாக நாமும் சிவில் விமான போக்குவரத்து துறையினர் போன்ற பல தரப்புகளுடனும் பேசி ஓர் முடிவுக்கு வரமுடியும் என்றனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
4 hours ago