எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மண்கும்பான் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை நேற்று (10) ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மண்கும்பான் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டில் ஹெரோயின் போதை பொருளை வைத்திருப்பதாக ஊர்காவற்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் நபரைக் கைது செய்து அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து நான்கு சிறு பொதிகளில் அடைக்கப்பட்ட ஹெரோயின் போதை பொருளை பொலிஸார் மீட்டனர்.
மீட்கப்பட்ட போதை பொருள் 300 மில்லி கிராம் எனவும், அவரிடம் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
12 minute ago
27 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
27 minute ago
39 minute ago