Editorial / 2019 ஜூலை 06 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
8 கிராம் 400 மில்லிகிராம் ஹொரோய்னை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குடும்பப் பெண்ணை, ஜூலை 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உடுவில் - மல்வம் பகுதியிலுள்ள வீடு ஒன்று சுன்னாகம் பொலிஸாரால் வியாழக்கிழமை சுற்றிவளைக்கப்பட்டது.
அங்கு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, 8 கிராம் 400 மில்லிகிராம் அளவுடைய ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அதனை விற்பனை செய்யும் நோக்குடன் பதுக்கு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், அங்கு வசிக்கும் ஒரு பிள்ளையின் தாய் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட பெண், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, 8 மில்லிகிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
16 minute ago
20 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
20 minute ago
47 minute ago