2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பொசன் வாரத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் நால்வர் பலி: 20 பேர் காயம்

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

பொசன் வாரத்தினுள் அநுராதபுரத்தில் ஏற்பட்ட விபத்துக்கள் ஊடாக நால்வர் உயிரிழந்துள்ளதோடு 20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் கடந்த 24ஆம்; திகதி இடம்பெற்ற விபத்தில் லொரியொன்றுடன் மோதி 64 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதே தினத்தன்று அநுராதபுரம் புளியங்குளம் பகுதியில் மோட்டார் வண்டியொன்று  வான் வண்டியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் கெப்பித்திகொள்ளாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கடந்த 25ஆம்  திகதி வஹமல்கொள்ளாவ பகுதியில் இரண்டு சக்கர உழவு இயந்திரமொன்று பஸ் வண்டியொன்றுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 16 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு விலச்சிய
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் வண்டியொன்று வீதியை விட்டு விலகிச் சென்றதில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X