2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

14 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

14 வயதுச் சிறுமியை மறைத்துவைத்து  3 நாட்கள்  குடும்பம் நடத்தியதாகக் கூறப்படும் ஒருவரையும் இவர்களுக்கு வீடு வழங்கி உதவியதாகக் கூறப்படும் ஒருவரையும் முந்தல் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இச்சிறுமியின் தாய் முந்தல் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரங்குளி, வேலுசுமன பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோது சந்தேக நபரையும் சிறுமியையும் கண்டுபிடித்ததாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் முந்தல் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X