2025 மே 23, வெள்ளிக்கிழமை

இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலுசுமனபுர பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில்  இளைஞரொருவர் மரணமடைந்துடன்;, மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

மதுரங்குளி பத்தாயம் பகுதியைச் சேர்ந்த கிஹான் சந்தன (வயது 26) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவர்.

இவ்விளைஞர் தான் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளை  வீதியோரத்தில்  நிறுத்திக்கொண்டிருந்தபோது, அவ்வழியால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இவ்விளைஞர் மீது மோதியதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த இவ்விளைஞர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  பின்னர் மரணமடைந்துள்ளார்.

காயமடைந்தவர்  முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X