2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளம் நகர சபைக்குட்பட்ட சேதமடைந்த வீதிகளின் புனரமைப்பு பணி ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 06 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ், ஜூட் சமந்த, எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் நகர சபைக்குட்பட்ட சேதமடைந்த வீதிகளை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் இன்று புத்தளம் தில்லையடி பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சேதமடைந்த வீதிகளை அவசரமாக புனர்நிர்மாணம் செய்யும் வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயற்திட்டத்தின் கீழ் இவ்வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ், உப தலைவர் குமார உட்பட நகர சபை உறுப்பினர்கள் மாகாண அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X