2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

சிலாபத்தில் வாகன விபத்து; இருவர் பலி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்,எஸ்.எம்.மும்தாஜ்,ஜூட் சமந்த)

சிலாபம்,  கிம்பிள்ள பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இதில் ஆராய்ச்சிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த லஹிரு பிரமோத பீரிஸ் (வயது 18), சுனில் சில்வா (வயது 45) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று  மோதி பின்னர் அந்த மோட்டார் சைக்கிள்கள் வீதியால்; பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றுடன் மோதியே விபத்திற்குள்ளாகியுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நால்வரே இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் இருவர்  உயிரிழந்துள்ளதாவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X