2025 மே 23, வெள்ளிக்கிழமை

முன்னாள் முதலமைச்சர் பேர்டிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

Super User   / 2012 ஒக்டோபர் 16 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்காவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய மக்கள் விடுதலை முன்னனி தீர்மானித்துள்ளது. 

அநுராதபுர மாவட்டத்தில் 67 நீர்பாசன குளங்களை அபிவிருத்தி செய்வதற்கா 110 மி;ல்லியன் ரூபா ஊழலில் ஈடுபட்டார் என்பது தொடர்பிலேயே மக்கள் விடுதலை முன்னனி வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யவுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை பிரிவின் அறிக்கை கடந்த 2010 நவம்பர் 25ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னனியின் வட மத்திய மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

எனினும், முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்காவிற்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வேலை நடைபெறமால் ஊழல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்கா, அவரது செயலாளர் மற்றும் மாகாண அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக குற்றங்கள் இருக்கின்றன. எனவே நாங்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் செல்லவுள்ளோம்" என மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, 2006ஆம் ஆண்டு மாவிலறு நீர் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நட்டஈடு கொடுப்பனவில் இடம்பெற்ற ஊழல் தொடர்பிலும்  இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக மூன்று பதவி காலங்களுக்காக 1999ஆம் ஆண்டிலிருந்து வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சராக பேர்டி பிரேமலால் திசாநாயக்கா செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X