2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 25 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், வண்ணாத்திவில்லுவின் பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரநாயக்கபுர பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடைய சல்பதுறுராகே குணசேகர என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த இவர் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட வேளை கப்ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இவ்வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X