2025 மே 14, புதன்கிழமை

சிறுவன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞர்கள் கைது

Super User   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

எட்டு வயதைக்கொண்ட சிறுவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

16 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு நேற்று மாலை கைது செய்யப்பட்வர்களாவர். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கடும் மழை காரணமாகப் பாடசாலைக்குச் செல்லாது மழையின் பின்னர் பாலக்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள மீன் வாடி ஒன்றிற்கு அருகில் நின்றுகொண்டிருந்துள்ளார்.

இதன்போது அங்கு வந்துள்ள சந்தேக நபர்களுள் ஒருவர் சிறுவளை ஏமாற்றி அங்கிருந்த மற்றொரு மீன் வாடி ஒன்றிற்குள் அழைத்துச் சென்று அங்கு வைத்து மேலும் இரண்டு இளைஞர்களுடன் சேர்ந்து சிறுவனை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினையடுத்து வீட்டுக்குச் சென்றுள்ள சிறுவன் நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களுள் இருவரைக் கைது செய்துள்ளனர். மற்றைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் வைத்திய சிகிச்சைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .