2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

5 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 28 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

தனது சகோதரனின் 5 வயது மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞனை முந்தல் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

28 வயதுடைய குறித்த சந்தேக நபர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் குளியாபிட்டி பிரதேசத்தில்  தனது சகோதரனின்  மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய பின் தலைமறைவாகியிருந்தார்.

குறித்த நபர் குளியாப்பிட்டி பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் முந்தல் பிரதேசத்தின் வீடொன்றில் வசிப்பதாக முந்தல் பொலிஸாருக்கு கிடைக்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து பொலிஸார் அவரை இன்று கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரினை குளியாப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X