2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'சிறந்த கிராமிய விளையாட்டு வீரர்களுக்கான அனுசரணை திட்டத்திற்கான நிகழ்ச்சி 2013'

A.P.Mathan   / 2013 ஜனவரி 23 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் துடிப்பான மற்றும் வளர்ந்து வரும் கிராமிய விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து தம் ஆதரவை வழங்கி வரும் ஜனசக்தி காப்புறுதியானது, 'சிறந்த கிராமிய விளையாட்டு வீரர்களுக்கான அனுசரணை திட்டம் 2013' என்ற திட்டத்திற்கு 06 புதிய பாடசாலை மட்ட விளையாட்டு வீரர்களை தெரிவு செய்துள்ளது. இத் திட்டத்தில் அளவெட்டி - யாழ்ப்பாணம், கஹவத்த, மாவத்தகம, உடவலவ, பொடரகம மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இணைந்துள்ளதுடன், ஆறு விளையாட்டு வீரர்கள் ஜனசக்தி மூலம் பணியாளர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். இவ் அனுசரணை திட்டமானது தொடர்ந்து 06வது வருடமாக முன்னெடுக்கப்படுவதுடன், ஜனசக்தி நிறுவனத்தின் ஆதரவு மற்றும் ஊக்குவிப்பின் மூலம் இத் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை விருத்தி செய்துகொள்ள முடியும். இத்துறையில் 18வது வருட பூர்த்தியை கொண்டாடும் ஜனசக்தியானது, 18 இளம் விளையாட்டு வீரர்களுக்கு தமது ஆதரவை வழங்கி வருகிறது.

இந் நிறுவனத்தின் 'சிறந்த கிராமிய விளையாட்டு வீரர்களுக்கான அனுசரணை திட்டம் 2013' நிகழ்ச்சித் திட்டமானது ஒவ்வொரு வீரர்களுக்கும் சவால்களை சமாளிப்பதற்கு ஏற்ற வகையிலான சிறந்த அனுசரணை பெக்கேஜ்களை வழங்குகிறது. இத் தெரிவு செய்யப்பட்ட இளம் வீரர்களுக்கும் மாதாந்த அனுசரணை மற்றும் தங்கள் தனிப்பட்ட செயல்திறனை விருத்தி செய்வதற்கான ஊக்குவிப்பு தொகை போன்றன வழங்கப்படவுள்ளன. மேலும் இவ் வீரர்களுக்கு அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப பயிற்றுநர்கள் மூலம் தொழில்நுட்ப ரீதியான வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளன.

இவ் வீரர்களின் உளவியல் நலன் கருதி, ஜனசக்தி ஊடாக தொடர்ந்து ஒரு வருடத்திற்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் பங்குபற்ற முன்னரும் பின்னரும் தனிநபர் வழிகாட்டல், ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் போன்றன முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் இவ் விளையாட்டு வீரர்கள் தமது விளையாட்டு போட்டிகளில் மிளிரும் வரை நிலையான வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தங்கள் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களாக இணைந்து கொள்ளவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

'இவ் இளம் விளையாட்டு வீரர்களுக்கு தங்கள் விளையாட்டு எதிர்பார்ப்புக்களை வெற்றிக் கொள்வதற்கான ஊக்குவிப்பை வழங்குவதும், இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுப்பதுமே இத்திட்டத்தின் குறிக்கோளாக உள்ளது' என ஜனசக்தி நிறுவனத்தின் நிதியாள்கை மற்றும் திட்டமிடல் பிரிவின் பொது முகாமையாளரும், இத்திட்டத்தின் இணை ஒருங்கிணைப்பாளருமான திரு.பர்டல் பின்டோ ஜயவர்தன தெரிவித்தார். மேலும் அவர் 'இத் திட்டமானது கடந்த 2007ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்படுகிறது. இக் குழந்தைகள் தமது போட்டிகளில் சிறப்பாக விளையாடுவர் எனவும் இலங்கையின் எதிர்கால விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு தமது பங்களிப்பை வழங்குவர் எனவும் நான் நம்பிக்கை கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், 'கடந்த வருடம் இவ் வீரர்கள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் கனிஷ்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன் போட்டித் தொடருடனான ஈடுபாடு, வலிமை, அர்ப்பணிப்பு போன்றவற்றை உறுதி செய்திருந்தனர். அனைத்து போட்டித்தொடரிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்ற பாடசாலை மட்ட விளையாட்டு வீரர்களுக்கு ஜனசக்தியானது  அனுசரணை வழங்குகிறது' எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .