2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ரமணி பெர்னான்டோ கூந்தல் மற்றும் அழகுக்கலை கல்விக்கூடத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழா

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 28 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரமணி பெர்னான்டோ கூந்தல் மற்றும் அழகுக்கலை கல்விக்கூடம் மற்றும் தமது நீண்டகால பங்காளராகிய யுனிலீவர் நிறுவனத்தின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான சன்சில்க் இணைந்து 8ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழா குறித்து அறிவித்துள்ளது. இவ் விழாவானது எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
 
இவ்வருடம் சன்சில்க் - ரமணி பெர்னான்டோ கூந்தல் மற்றும் அழகுக்கலை கல்விக்கூடத்தின் மூலம் 101 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படவுள்ளது. இவ்வருட பட்டமளிப்பு விழாவின்; தொனிப்பொருளாக 'Hair Art 2013' அமைந்துள்ளதுடன், இப் பேஷன் ஷோவில் Bling, Fantasy, மணமகள் அலங்காரம் மற்றும் ஆண்களுக்கான வெட்டுதல் மற்றும் கலரிங் போன்ற விசேட பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இவ் விழாவில் City & Guilds இன் சர்வதேச தங்கப்பதக்கத்தை வென்ற பேராசிரியர். லக்கி லெனகலவும் பங்கேற்கவுள்ளார்.

2013ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா குறித்து ரமணி பெர்னான்டோ அழகு நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், நிர்வாக பணிப்பாளருமான திருமதி.ரமணி பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், 'இப் பட்டமளிப்பு விழாவினை மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்து வருகிறோம். எமது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்.லக்கி போன்றோர் சிறப்பாக செயல்பட்டு எமது கல்விக்கூடத்திற்கு மாத்திரமின்றி நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். எமது மாணவர்கள் கூந்தல் மற்றும் அழகுக்கலை துறையில் மிளிருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு கடந்த பல ஆண்டுகளாக நாம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொழிற் தகைமைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றோம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்' என்றார். மேலும் அவர் 'இவ் வெற்றிப்பயணத்தில் கடந்த 8 ஆண்டுகளாக தம்மோடு இணைந்து அர்ப்பணிப்புடன்; செயற்பட்ட சன்சில்க் வர்த்தகநாமத்திற்கும், இக் கல்விகூடத்தின் வளர்ச்சிக்கும், மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்கிய பேராசிரியர்.லக்கி லெனகலவிற்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.'

சன்சில்க் வர்த்தகநாமம் மற்றும் அதன் அபிவிருத்திகள் குறித்து கருத்து தெரிவித்த யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வீட்டு மற்றும் தனிநபர் பராமரிப்பு பிரிவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான அசங்க ரணசிங்க, 'சன்சில்க் வர்த்தகநாமமானது இலங்கை யுனிலீவர் நிறுவனத்தின் முதன்மை கூந்தல் பராமரிப்பு தயாரிப்பாகும். பாவனையாளர்களின் பல்வேறுபட்ட கூந்தல் தேவைகளை கருத்தில் கொண்டு சன்சில்க் வர்த்தகநாமத்தை Anglo- Dutch Conglomerates இன் 'Billion dollar  brands' என்ற நாமத்திற்கு உயர்த்தும் நோக்கில் சர்வதேச ரீதியில் கூந்தல் துறையைச் சேர்ந்த பல நிபுணர்களுடன் கைகோர்த்துள்ளோம். இதன் ஓர் அங்கமாகவே, எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கூந்தல் பராமரிப்பின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இத்துறையில் முன்னோடியாக திகழும் திருமதி ரமணி பெர்னான்டோவுடன் கைகோர்த்துள்ளோம்' என்றார்.

இப் பட்டமளிப்பு விழா உடனான ஈடுபாடு குறித்து யுனிலீவர் நிறுவனத்தின் கூந்தல் பராமரிப்பு பிரிவின் தலைமை அதிகாரி வத்சலா அலுத்கெதர கருத்து தெரிவிக்கையில், 'ரமணி பெர்னான்டோ கூந்தல் மற்றும் அழகுக்கலை கல்விக்கூடத்துடனான பங்காண்மை மூலம் இலங்கையில் கூந்தல் மற்றும் அழகுக்கலை துறையில் மிளிர விரும்பும் பல இளம் தனிநபர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிந்துள்ளது. இதன் காரணமாகவே, நாடு பூராகவும் உள்ள பல இளம் தனிநபர்களின் கனவினை நனவாக்கும் நோக்கில் சன்சில்க் வர்த்தகநாமத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 24 புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன' என்றார்.

சன்சில்க் புலமைப்பரிசிலைப் பெற்ற பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எச்.அலீல் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், 'சன்சில்க் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சன்சில்க் ஹெயார் எக்ஸ்பேர்ட் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் புலமைப்பரிசிலைப் பெற்றேன். இத்திட்டத்தில் கூந்தல் மற்றும் அழகுக்கலை துறை மற்றும் நாளாந்தம் தனிநபர் அழகை மெருகூட்டிக் கொள்ளும் விதம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது' என்றார். மேலும் அவர் கூந்தல் அலங்காரத்துறையில் மிளிருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த யுனிலீவர் நிறுவனத்தின்; சன்சில்க் வர்த்தகநாமத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் இந் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பல வாழ்க்கை பாடங்களையும் கற்றுக்கொண்டேன' என்றார். எம்.எச்.அலீல் ரஹ்மான் 'சன்சில்க் ஹெயார் எக்ஸ்பேர்ட்ஸ்' திட்டத்தில் மணமகள் கூந்தல் அலங்கார அணிவகுப்பு பிரிவில் முதலிடத்தை பெற்றதுடன், இக் கல்விக்கூடத்தின் சிறந்த சன்சில்க் புலமைப்பரிசில் மாணவனுக்கான விருதினையும் பெற்றார்.

இந்நிகழ்வில் முன்னணி ஆடை வடிவமைப்பாளரும், நடன அமைப்பாளருமான செனக டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'நான் இப் பேஷன் ஷோவுடன் இணைந்து செயலாற்றுவதுடன், மாணவ மாணவியருக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறேன். ஒவ்வொரு வருடமும் ரமணி மற்றும் மாணவர்களுடன் இணைந்து கண்கவரும் பேஷன் ஷோவை வழங்கி வருகிறோம். இந் நிகழ்ச்சியில்; கூந்தல் கலையின் (hair art) புதிய வடிவமைப்புக்கள் பல காண்பிக்கப்படவுள்ளன. இந் நிகழ்ச்சியானது மாணவர்களுக்கு தங்கள் திறமை மற்றும் படைபாற்றல்களை வெளிக்காட்டுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும்' எனத் தெரிவித்தார்.

ரமணி பெர்னான்டோ கூந்தல் மற்றும் அழகுக்கலை கல்விக்கூடமானது, இலங்கையில் அழகுக்கலை துறையில் முன்னோடியாக திகழ்வதுடன், கூந்தல் மற்றும் அழகு பராமரிப்பு தொடர்பான டிப்ளோமா கற்கைநெறிகள், உயர் கற்கைநெறிகள் மற்றும் விசேட கற்கைநெறிகள்; ஆகியவற்றை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட கல்விக்கூடமாக திகழ்கிறது. 2005ஆம் ஆண்டு முதல் இன்றுவரை City & Guilds நிறுவனத்துடனான பங்காண்மை ஊடாக அழகு பராமரிப்பு துறைக்கு சர்வதேச சான்;றுகளைப் பெற்ற 4000 மாணவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .