2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தகவல் தொழில்நுட்ப சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள விண்டோஸ்8

A.P.Mathan   / 2013 ஜனவரி 22 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


விண்டோஸ்8 நடவடிக்கை கட்டமைப்பு இலங்கை தகவல் தொழில்நுட்ப சந்தையிலும் அப்ளிகேஷன் நிர்மாணத்திலும் ஏற்படுத்தியிருக்கும் புரட்சிகர மாற்றத்தை தெளிவுபடுத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடக செயமலர்வொன்று கொழும்பிலுள்ள மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்ட இச்செயமலர்வை  மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. 

இலங்கை பல்கலைக்கழக மாணவ மாணவிகள் 600 பேருக்கு  இதுவரையில் புதிய மென்பொருள்களை நிர்மாணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மைக்ரொசொப்ட் ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி சிறியான் டி சில்வா விஜேரத்ன தெரிவித்தார்.

'விண்டோஸ்8 ஊடாக புதிய மென்பொருள்களை உற்பத்தி செய்வதற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 600 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலக சந்தையில் 60 மில்லியனுக்கும் அதிகமான மென்பொருள்கள் விண்டோஸ்8 மூலம் பாவனையாளர்களது கரங்களை சென்றடைந்துள்ளன.  விண்டோஸ்8 மூலம் எமது இளைஞர் யுவதிகள் நிர்மாணிக்கும் புதிய மென்பொருள்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு வருமானத்தையும் ஈட்டிக்கொடுக்கும்.  இலங்கை தகவல்தொழில்நுட்ப துறையில் தற்போது பாரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நாம் காண்கின்றோம்' என குறிப்பிட்டார்.

உள்ளுரில் அப்ளிகேஷன்களை தயாரிப்பவர்களை ஊக்குவிப்பதும் அவர்களை அறிவுசார் ரீதியாக முன்னேற்றுவதும் மைக்ரோசொப்ட் டி.பி.ஈ பணிப்பாளர் வெலிங்டன் பெரேராவின் முக்கிய பணியாகும்.  கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் இத்தகைய புதிய அப்ளிகேஷன் உற்பத்தியாளர்கள் 600பேரை மைக்ரோசொப்ட் நிறுவனம் பயிற்றுவித்துள்ளது.

இச்செயமலர்வில் மைக்ரோசொப்ட ஸ்ரீலங்காவின் பங்குதரார்களான ஏசர், டெல்,எச்.பி, சிங்கர் மற்றும் சொப்ட்லொஜிக் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் தமது நிறுவனங்களில் விண்டோஸ்8 உற்பத்திகளை காட்சிப்படுத்தினர். விண்டோஸ்8 மூலம் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்வர்களிடையே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் OEM பணிப்பாளர் பூஜித்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

அத்துடன் வர்த்தக நிறுவனங்களுக்கு தேவையான பாதுகாப்பு, செயற்றிரன், வேகமான தகவல் தொழில்நுட்ப சூழல் ஆகியவற்றை விண்டோஸ்8 இலகுவாக ஏற்படுத்தி கொடுப்பதால் விண்டோஸ்8 இற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .