2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

சிரச சூப்பர் ஸ்டார் சீசன் 05இன் உத்தியோகபூர்வ காப்புறுதி பங்காளராக ஜனசக்தி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 17 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


நம் நாட்டு இளைய தலைமுறையினரின் இசைத்திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் சிரச தொலைக்காட்சியால் நடாத்தப்படும் சிரச சூப்பர் ஸ்டார் சீசன் 05 நிகழ்ச்சியின்; உத்தியோகப்பூர்வ காப்புறுதி பங்காளராக ஜனசக்தி காப்புறுதி இணைந்துள்ளது. கடந்த சீசன்களின் வெற்றியாளர்களாக அஜித் பண்டார, பிரதீப் ரங்கன, ஷானிகா மதுமாலி மற்றும் திசர சானக ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

சர்வதேச மேடையில் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் அடுத்த குரலுக்குரிய வெற்றியாளரை தெரிவு செய்வது சிரச சூப்பர் ஸ்டார் சீசன் 05 இன் குறிக்கோளாக உள்ளது.

'இவ்வகையான நிகழ்ச்சிகளுக்கு பங்காளராக செயற்படுவதன் மூலம் இசைத்திறமை உள்ளவர்கள் தங்கள் இசைப்பயணத்தை தொடர்வதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுக்க முடிந்துள்ளது' என ஜனசக்தியின் உதவி சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் ரவி பால்ராஜ் தெரிவித்தார். மேலும் அவர் சிரச சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சிகளுக்கு பங்காளராக செயற்படுவதையிட்டு ஜனசக்தி மகிழ்ச்சியடைகிறது என்றார்.

கடந்த 2007ஆம் ஆண்டின் வெற்றியாளருக்கு மோட்டார்வாகன காப்புறுதி திட்டத்தை வழங்குவதற்கென சிரச சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் மூலம்; ஜனசக்தி நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது. மேலும் 11 இறுதிப் போட்டியாளர்களின் மோட்டார் வாகனங்களுக்கு ஜனசக்தியின் ஃபுல் ஒப்ஷன் காப்புறுதி திட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்வருடமும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெறுபவருக்கு ரூ.25 மில்லியனுக்கு தனிநபர் விபத்துக் காப்புறுதி மற்றும் 11 இறுதி போட்டியாளர்களுக்கு ரூ.10 மில்லியன் பெறுமதியான தனிநபர் விபத்துக் காப்புறுதி திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .