2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

இலங்கையின் பழங்கள், மரக்கறி ஏற்றுமதி 2012இல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 03 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012இல் இலங்கையின் பழங்கள், மரக்கறி ஏற்றுமதி 3 முதல் 5 வீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக ஏற்றுமதித்துறைசார்ந்த நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த வளர்ச்சி 10 வீதமாக பதிவாகியிருந்ததாகவும், இந்த வருடம் ஏற்றுமதி துறை எதிர்நோக்கி வரும் பின்னடைவின் காரணமாக இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகள் பயிர்ச்செய்கையாளர், பதப்படுத்துநர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் சிவஞானம் ஞானஸ்காந்தன் கருத்து தெரிவிக்கையில், 'இந்த வருடத்தை பொறுத்தமட்டில் பழங்களின் ஏற்றுமதியின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், மரக்கறி வகைகளை பொறுத்தமட்டில் அதிகரிப்பு ஏற்படவில்லை' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .