2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

நடப்பு ஆண்டில் உலக பொருளாதாரம் 3.3 வீதம் வளர்ச்சியடையும்: சர்வதேச நாணய நிதியம்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 17 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டில் உலக பொருளாதாரம் 3.3 வீதத்தால் வளர்ச்சியடையும் எனவும், அமெரிக்காவின் பங்களிப்பு அதிகளவாக 1.9 வீதமாக அமைந்திருக்குமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 5.3 வீதமாகவும், இயுரோ ஆசியா பிராந்தியத்தின் வளர்ச்சி 0.3 வீதமாகவும் அமைந்திருக்குமென குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகர் ஒலிவர் பிளன்கார்ட் கருத்து தெரிவிக்கையில், ”தற்போது இரட்டை விதமான பொருளாதார அபிவிருத்தி இடம்பெற்று வருகிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உறுதியான அபிவிருத்தியும், அபிவிருத்தியடைந்த நாடுகளில் மந்த கதியிலும் இந்த பொருளாதார அபிவிருத்தி நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது” என்றார்.

ஆசிய நாடுகளை பொறுத்தமட்டில் சீனாவில் பொருளாதார அதிகரிப்பு 8 வீதமாக காணப்படுமெனவும், இந்தியா 5.7 வீத அதிகரிப்பை பதிவு செய்யுமெனவும், ஜப்பான் 1.6 வீத பொருளாதார வளர்ச்சியை நடப்பு ஆண்டில் காண்பிக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .