2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

சன்ஷைன்ஸ் ஹோல்டிங்ஸின் கிளை நிறுவனம் SBL தனது 45ஆவது வருடத்தை பூர்த்தி செய்தது

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


சன்ஷைன்ஸ் குரூப்பின் முதலாவது வர்த்தக நிறுவனமும் இலங்கை சுகாதாரத் துறையின் முன்னணி நிறுவனமுமான சுவிஸ் பயோஜனிக்ஸ் லிமிட்டட் (SBL) தனது 45ஆவது வருட பூர்த்தியை அண்மையில் மிக விமரிசையாகக் கொண்டாடியது.

1967ஆம் ஆண்டு 'லங்கா மெடிக்கல்ஸ்' என்ற பெயரில் சன்ஷைன்ஸ் குரூப்பின் ஸ்தாபகர் ஜி.சதாசிவத்தால் ஆரம்பிக்கப்பட்ட இவ்நிறுவனம் தனது வர்த்தக வலையமைப்பில் பல்வேறு வகையான வளர்ச்சியுடன் கடந்த 45 ஆண்டுகளாக தனது பணியை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. 

அத்துடன் இலங்கை மருத்துவ துறையில் சர்வதேச நிறுவனங்களின் நன்மதிப்பைப் பெற்ற இலங்கை நிறுவனமான SBL சுகாதாரத்துறைக்கு சேவை வழங்குவதற்காகவே விசேட திறமை கொண்ட ஊழியர் குழாமொன்றை தன்வசம் கொண்டுள்ளதுடன், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஊழியர்கள் 300 பேரையும், விநியோக பிரிவு ஊழியர்கள் 200 பேரையும் கொண்டு செயற்படுகின்றது. 

45ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு 'விஷன் 2020' கண்புரை (Cataract) ஒழிப்புத்திட்டத்திற்கு 500 Intraocular  Lens களை நிறுவனம் அன்பளித்திருந்தது. சுகாதார அமைச்சின் வைத்தியப் பிரிவின் மேலதிக செயலாளர் டாக்டர் பி.ஜி.மஹீபால ஊடாகவே வில்லைகள் கையளிக்கப்பட்டன. கண்புரை நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான தேசிய திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே இவை வழங்கப்பட்டன. 

கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற வைபவத்தில் சன்ஷைன்ஸ்; நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜி.சதாசிவம், முகாமைத்துவ பணிப்பாளர் விஷ் கோவிந்தசாமி, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய ஊழியர்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை சுகாதாரத்துறையில் கடந்த 45 ஆண்டுகளாக SBL நிறுவனம் ஆற்றிய பணிகள் தொடர்பில் அதன் இணை பணிப்பாளர் ஷியாம் சதாசிவம் கருத்து தெரிவிக்கையில், 'ஆரம்பம் முதலே எமது நிறுவனம் பாவனையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. உயர் ரக சேவையை வழங்குவதை நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளதால் இன்று பலரது பாராட்டு எமக்கு கிடைத்துள்ளன' என குறிப்பிட்டார்.

SBL நிறுவனம் சுகாதாரத்துறையில் அனைத்து பிரிவுகளிலும் வியாபித்து தனது சேவையை வழங்குகின்றது. மருந்து பொருட்களை பதிவு செய்வது முதல் இறக்குமதி செய்யும் வரையான அனைத்தும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சுங்க அனுமதி, விற்பனை, சந்தைப்படுத்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல் ஆகியனவும் அடங்குகின்றன. அத்துடன் Abbott Laboratories, Zydus Cadila, Glenmark Pharmaceuticals, Novo Nordisk, Johnson & Johnson Medical, 3M Healthcare, GE Healthcare,  Siemens Diagnostics போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து SBL செயற்படுகின்றமையானது நிறுவனத்திற்கு கிடைத்துள்ள சர்வதேச அந்தஸ்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். 

SBL நிறுவனத்துக்கு சொந்தமான HealthGuard பார்மஸி மேல்மாகாணத்தில் மாத்திரம் கடந்த ஆறு ஆண்டுகளில் 16 கிளைகளை அமைத்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது. SBL நிறுவனத்தின் தாய் நிறுவனமான சன்ஷைன்ஸ் ஹோல்டிங்ஸ் குரூப், LMD யினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 50 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சுகாதாரம், பயிர்ச் செய்கை, துரித பாவனைப் பொருட்கள், (FMCG- Fast Moving consumer Goods) Packaging உள்ளிட்ட பல துறைகளில் முன்னிலை பெற்று விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .