2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

உலகின் வேகமான மைக்குரோபுரொசெசர்களை கொண்ட SPARC சேவர்கள் ஒராக்கள் மூலம் அறிமுகம்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 23 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய காலகட்டத்தில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிறுவனங்களுக்கு கணினிகளின் பயன்பாடு அத்தியாவசிய தேவையாக அமைந்துள்ளன. பெரிய டேடா கட்டமைப்புகளின் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்வதுடன், வளர்ச்சி மற்றும் டேடா அனுகூலங்களை பெற்றுக் கொள்வதற்கு இவை அத்தியாவசியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இதனை நிவர்த்தி செய்யும், ஒராக்கள் நிறுவனத்தின் மூலம் உலகின் வேகமான மைக்குரோபுரொசெசர்களை கொண்ட SPARC சேவர்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த சேவர்களில் T5 மற்றும் M5 ஆகிய மைக்குரோபுரொசெசர்கள் உள்ளடங்கியுள்ளன.

பாரம்பரிய சாதனங்களின் மூலம் தற்போதைய காலகட்டத்தில் நிலவும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் இதுபோன்ற நவீன மயமான சாதனங்களின் அறிமுகம் வர்த்தக நடவடிக்கைகளை வேகமாக இடம்பெற செய்வதுடன், சிக்கனமான முறையில் முன்னெடுக்கவும் உதவியாக அமைகின்றன.

ஒராக்கள் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் ஜோன் பௌலர் கருத்து தெரிவிக்கையில், 'ஒராக்கள் தனது SPARC சாதனங்களை மீளமைப்பு செய்துள்ளது. இதற்காக உலகின் மிகவும் வேகமான மைக்குரோபுரொசெசர்களை இந்த சாதனங்களில் உள்வாங்கியுள்ளது. ஜாவா மற்றும் பல்-இணைவு ஆப்ளிகேஷன்கள் இந்த சாதனங்களின் மூலம் இயக்க முடியும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .