2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தொழிற்துறைகளின் உற்பத்தி செலவீனம் 20 – 30 வீதத்தால் அதிகரிக்கும்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 22 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்த மின்சார கட்டணப்பட்டியல் அதிகரிப்பை தொடர்ந்து, வெவ்வேறு தொழில்துறைகளின் உற்பத்தி செலவீனம் 20 – 30 வீதத்தால் அதிகரிக்கும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் எதிர்வு கூறியுள்ளது.

இதுபோன்றதொரு கட்டண உயர்வை வர்த்தக நிறுவனங்களுக்கு தாங்கிக் கொள்வது என்பது மிகவும் கடினமான காரியமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக நிறுவனங்களின் இலாபத்தில் பாரிய தாக்கம் ஏற்படும். ஏற்றுமதிக்காக பொருட்கள் மற்றும் சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களை இந்த கட்டண உயர்வு பெருமளவு பாதிக்கும். ஏனெனில் இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பெருமளவு போட்டிகர சூழலையும் சவால்களையும் எதிர்நோக்கியுள்ளன. என இலங்கை வர்த்தக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

  Comments - 0

  • nafshan Wednesday, 24 April 2013 07:07 AM

    மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .