2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை வருமானமாக 2013 முதல் காலாண்டில் 200 மில்லியன் ரூபா

A.P.Mathan   / 2013 மார்ச் 07 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் இலக்காக கொள்ளப்பட்டிருந்த முதலாவது ஆண்டில் 1 பில்லியன் ரூபாவை வருமானமாக பெறுவது என்பது கைகூடியுள்ளதாக நெடுஞ்சாலை அபிவிருத்தி அதிகார சபையின் பராமரிப்பு நிர்வாகம் மற்றும் நிர்மாண பிரிவின் பணிப்பாளர் ரி.கே.ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இவ்வருடத்தின் முதலாவது காலாண்டினுள் நாம் இதுவரையில் 200 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுள்ளோம். இவ்வாண்டின் முதலிரு மாதங்களில் சுமார் 4 மில்லியன் வாகனங்கள் இந்த நெடுஞ்சாலையை உபயோகித்து பயனடைந்துள்ளன.

இந்த அதிவேக நெடுஞ்சாலை திறந்தது முதல் இதுவரையில் இந்த வீதியை உபயோகிப்பதற்கான கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்பதுடன், இவ்வருட இறுதிக்குள் இந்த வீதியை மேலும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளன. தற்போது 96 கிலோமீற்றராக காணப்படும் இந்த நெடுஞ்சாலையின் நீளம், இவ்வருட இறுதிக்குள் 128 கிலோமீற்றர்களாக அதிகரிப்பதற்கான விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .