2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வாயுவை தூய்மையாக்கும் ஆர்பிலைட் CFL மின்குமிழ்கள் இலங்கையில் அறிமுகம்

A.P.Mathan   / 2013 மார்ச் 06 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையர்களின் வாழ்க்கை முறையை இலகுவாக்கும் வகையில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ள ஆர்பிகோ (றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம்) தனது ஆர்பிகோ ஆர்பிலைட் வர்த்தக நாமத்தின் கீழ் CFL மின்குமிழ்களை (Air Purifying – CFL Bulb) முதல் தடவையாக இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மின்குமிழ்களின் விசேட அம்சங்களாக, இம்மின்குமிழ் ஒளிரும் பகுதிகளில் கொடிய கிருமிகள், பக்டீரியாக்கள் அழிக்கப்படுவதுடன், வாயு சுத்தம் செய்யப்பட்டு, துர் மணங்களும் அகற்றப்பட்டு தூய்மை நிலை பேணப்படுவதாக அமைந்துள்ளன. கொண்டுள்ளது.

ஆர்பிகோ நிறுவனத்தின் மூலம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய Air Purifying – CFL Bulb களின் மூலம் 3.5 மில்லியன் மறை அயன்களை தோற்றுவிக்கப்படுகின்றது. இந்த அநியன்கள் கொடிய வாயுக்களான ஃபோர்மல்டிஹைட், அமோனியா, மெதைல்பென்சீன் மற்றும் நாளாந்தம் அதிகளவு உறிஞ்ப்படின் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நச்சு வாயுக்கள் போன்றவற்றை சீராக்கக்கூடிய தன்மையை கொண்டுள்ளன. இந்த அநியன்கள் ஒட்சிசன் மூலக்கூறுகளுடன் வெளியாவதால், கிருமிகள், ஃபங்கஸ் மற்றும் வளியிலுள்ள இதர நுண்ணங்கிகளை கொல்லும் திறன் படைத்ததாக அமைந்துள்ளது. இந்த அநியன்கள் வளியில் கலந்திருக்கும் தூசு துணிக்கைகளுடன் கலந்து அவற்றின் பாரத்தை அதிகரிக்கச் செய்வதால், அந்த தூசு துணிக்கைகள் நிலத்தில் விழுகின்றன. சதுர சென்ரிமீற்றருக்கு 0.05ppm அளவு ஓசோனை இந்த அநியன் ஜெனரேற்றர் உற்பத்தி செய்வதால் அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்காமல், வளியில் காணப்படும் துர் மணத்தை போக்க உதவுகிறது. Arpilight Air Purifying CFL குமிழ்களின் மற்றுமொரு விசேட அம்சமாக தொலைக்காட்சி, கணணிகள் மற்றும் இதர மின்சாதனங்களின் மூலம் வெளியிடப்படும் மாசடைந்த வளியும் சுத்தமாக்கப்படுகிறது.

இந்த புதிய Arpilight Air Purifying - CFL புகையினாலும், அசுத்தமான வாயு பரவும் வீடுகள், சுவர்களின் மீது கிருமிகள் காணப்படும் இல்லங்கள், சிற்றுண்டிச்சாலைகள், அதிகளவானோர் பயன்படுத்தும் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ஆய்வுகூடங்கள், சாலையோர கடைகள், குறைந்த இடங்களை கொண்ட வியாபார நிலையங்கள் போன்ற காற்று அதிகளவு மாசடையும் பகுதிகளில் பயன்படுத்த உகந்தது.

இந்த மின்குமிழ் குறித்து பிராந்திய விற்பனை அதிகாரிகளுக்கு ஆர்பிகோ பயிற்சி பட்டறை ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் விற்பனை அபிவிருத்தி முகாமையாளர் ரோஹண நீலகொல்ல கருத்து தெரிவிக்கையில், 'தற்போது இலங்கை சந்தையில் விற்பனைக்குள்ள சிஃஎவ்எல் மின்குமிழ்கள் வரிசையில் ஐந்து நட்சத்திர மின்குமிழ் எனும் விருதை பெற்றுள்ள மின்குமிழ் இதுவாகும். இதனால் 80 வருடகால நம்பிக்கையை வென்ற நிறுவனம் எனும் வகையில் எமது நிறுவனம் தயாரிக்கும் இந்த மின்குமிழ்கள் மீது வாடிக்கையாளர்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். எமது இந்த புதிய வாயு சுத்திகரிக்கும் மின்குமிழ்கள் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள ஒரு புதிய அனுபவம் என்பதுடன், தேவையை நிறைவேற்றும் வகையிலும் அமைந்துள்ளன. அத்துடன் நாம் தற்போது வதியும், அசுத்தமான சூழலுக்கு ஏற்ப அந்த வாயு மண்டலத்தை தூய்மையாக்கும் செயன்முறையில் ஈடுபடுகின்றமை இந்த மின்குமிழ்களின் விசேட அம்சமாகும். இந்த மின்குமிழ் வகையின் அறிமுகத்தின் மூலம் நாம் இலங்கையர்களின் சுகாதார நலனை முன்னேற்ற முடியும் என நம்புகிறோம்' என்றார்.

80 வருடங்களுக்கு அதிகமான உயர் பாரம்பரிய வரலாற்றையும், 35000இற்கும் அதிகமான ஊழியர்களையும் கொண்டுள்ளதுடன், இலங்கையின் மிகப்பெரிய தேசிய குழும வியாபார நிறுவனமாக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம், பல்வேறு துறைகளில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதிகளவு சந்தைவாய்ப்பை தன்னகத்தே கொண்ட பல்வேறு தயாரிப்புகளின் தாயகமாக திகழும் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம், இந்நாட்டின் சுப்பர் மார்க்கெட்கள், பெருந்தோட்டத்துறை, பங்குச்சந்தை முகவர் சேவைகள், ரயர், பிளாஸ்ரிக் மற்றும் நிர்மாணத்துறை போன்ற துறைகளிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. நகர் பகுதிகளை போலவே, கிராமிய மட்டத்திலும், பலராலும் நேசிக்கப்படும் நாமமாக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம் திகழ்கிறது. பிரதானமாக ஆர்பிகோ வர்த்தக நாமத்தை விசேடமாக குறிப்பிட முடியும். நாடு பூராகவும் இந்த வர்த்தக நாமத்தை சேர்ந்த தயாரிப்புகள் கிடைக்கின்றமை விசேட அம்சமாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .