2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகளுக்கு கைகொடுக்கும் CBLஇன் 'கொவி சரண'

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய விவசாயிகளின் நலன் கருதி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் சிபிஎல் நிறுவனம், அண்மையில் வரட்சியால் பாதிப்படைந்த மகாவலி எச்.பிரிவைச் சேர்ந்த விவசாயிகளின் நலன்கருதி பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருந்தது. சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் 'கொவி பவுல' திட்டமானது வரட்சியால் பாதிப்புற்ற சோயா விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. 'நாம் உங்களின் பலம் - நீங்கள் தேசத்தின் பலம்' என்ற செயற்றிட்டத்தின் கீழ் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உந்துசக்தியும், உலர் உணவுப்பொருட்கள் மற்றும் வேளாண்மை உபகரணங்கள் போன்றன பகிர்ந்தளிக்கப்பட்டன.

மகாவலி எச்.பிரிவைச் சேர்ந்த தலாவ, எப்பாவல, நொச்சியாகாமம், தபுத்தேகம, கல்னேவ, ஹொரிகஸ்வேவ மற்றும் கலங்குட்டிய ஆகிய பிரதேசங்களில் சோயா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த 1300 விவசாயிகள் பயனடையும் வகையில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன உள்ளடங்கிய குழுவினர் அப்பிரதேசங்களுக்கு சென்று பாதிப்படைந்த விவசாயக் குடும்பங்களின்; நலன்களை விசாரித்ததுடன், அவர்களிடமிருந்து பெரும் வரவேற்பினையும் பெற்றனர். மேலும் அக்குழுவினர் பாதிப்படைந்த ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று 60 இலட்சம் பெறுமதியான உணவுப்பொருட்கள் மற்றும் வேளாண்மை உபகரணங்கள் போன்றவற்றை பகிர்ந்தளித்திருந்தனர்.

தேசிய விவசாயத்துறையை பாதுகாக்க தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் சிபிஎல் நிறுவனம், நீண்டகாலமாக சுமார் 8000 தேசிய விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பினை பேணிவருகிறது. மேலும் 4GB, சமபோஷ, ONE THE GO போன்றவற்றின் தயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருட்களை தேசிய விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதுடன், நீண்டகாலமாக நியாயமான விலைக்கொள்கையை பேணிவருகிறது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன தேசத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளை பாதுகாப்பதற்கு, தமது நிறுவனம் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். இத்தகைய அசம்பாவித நிலைமைகளின்போது விவசாயிகளுக்கு உந்துசக்தியையும், சரியான வழிகாட்டல்களையும் வழங்குவதை குறிக்கோளாக கொண்டு தமது நிறுவனம் செயற்படுகிறது என்றார். இயற்கை அனர்த்தங்கள் அல்லது வேறு அனர்த்தங்களின் போது பயிர்ச்செய்கைகளை பாதுகாப்பதற்கு அவசியமான விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் சிபிஎல் நிறுவனம் தொடர்ந்தும் செயற்படுகிறது என தெரிவித்திருந்தார்.

தேசிய சோயா உற்பத்தியில் பெருமளவினைக் கொள்வனவு செய்யும் முதன்மை வாடிக்கையாளரான சிபிஎல் நிறுவனம், விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்கும் நோக்கில் நிலையான விலை நிர்ணயத்திற்கு அமைய பயிர்களை கொள்வனவு செய்தல் என்ற தீர்மானத்தின் கீழ் செயற்பட்டு வருகிறது. பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனம் பாசிப்பயறு, அரிசி, சோளம் மற்றும் சோயா போன்ற தானியங்களுக்கு அதிகுறைந்த விலைக் கட்டுப்பாட்டை பேணிவருகிறது. அதற்கமைய சந்தையில் விலை அதிகரிக்கும் போது அதற்கு நியாயமான விலையையும், விலை குறைவடையும் போது நிலையாக விலையை பேணல் என்ற கொள்கையின் கீழ் செயற்பட்டு வருகிறது.

இதைத்தவிர, விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் வகையில் சிபிஎல் குழுமத்தின் கூட்டு நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் 'கொவி பவுல' (விவசாயக் குடும்பம்) தலைப்பின் கீழ் 4 திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டங்களுள் விவசாய அபிவிருத்தி, விழிப்புணர்வுக்கான 'கொவி தெனும' திட்டம், அசம்பாவித நிலைமைகளின் போது விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வகையில் 'கொவி சரண' திட்டம், விவசாயிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தின் குதூகலத்திற்கு 'கொவி சதுட்ட' திட்டம், சமய கலாசார அபிவிருத்திக்கான 'கொவி அரண' திட்டம் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .