2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

இலங்கையிலுள்ள 10 போதனா வைத்தியசாலைகளை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் டெட்டோல்

A.P.Mathan   / 2013 ஜனவரி 16 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் முன்னணி வர்த்தக நாமமான டெட்டோல், சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையிலுள்ள 10 போதனா வைத்தியசாலைகளை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதுடன், இந்நிகழ்ச்சிக்கான திட்ட முன்மொழிவை அண்மையில் பொலன்னறுவையில் வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் மைத்ரிபால சிறிசேன வசம் ஒப்படைத்திருந்தது. இதன் ஓர் அங்கமாக, பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை இந்நிறுவனம் ஆரம்பித்திருந்தது.

இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், பலப்பிட்டிய, குருநாகல், ராகம, மாத்தறை, புத்தளம், நீர்கொழும்பு, கேகாலை மற்றும் பேராதனை ஆகிய பிரதேசங்களில் உள்ள போதனா வைத்தியசாலைகள் மறுசீரமைக்கப்படவுள்ளதுடன், தற்கால தேவைகளுக்கு இணையான நவீன தரத்துடன் வசதிகள் புதுப்பிக்கப்படவுள்ளன.

இத்திட்டம் குறித்து ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் ராகுல் முர்காய் கருத்து தெரிவிக்கையில் 'குடும்ப சுகாதாரத்தின் அவசியம் குறித்து அக்கறை செலுத்தும் வர்த்தக நாமமாக டெட்டோல் காணப்படுகிறது. ஒரு குடும்பத்தின் நலன், நாளாந்தம் மேற்கொள்ளும் சரியான தெரிவுகளில் தங்கியுள்ளது. சர்வதேச ரீதியில்  ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்தும் வர்த்தக நாமமாக டெட்டோல் திகழ்கிறது. எனவே, எமது கூட்டு சமூகப்பொறுப்புணர்வு திட்டங்கள் சுகாதாரத்தை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. இதனூடாக சுகாதாரம் மற்றும் முதலுதவி போன்றவற்றை மேம்படுத்தி நாட்டில் சிறந்த சூழலை கட்டியெழுப்ப முடியும்' என்றார். 

இந்த பொலன்னறுவை வைத்தியசாலை மறுசீரமைப்பு திட்டம் குறித்து ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் தன்சீம் ரெஸ்வான் கருத்து தெரிவிக்கையில் 'பொலன்னறுவை மாவட்டத்தின் சனத்தொகை 450,000மாக உள்ளதுடன், பெரும்பாலானவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் விவசாயத்துறைக்கு தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எனவே, அவர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது அவசியமானதாகும். இதன் மூலம் பொருளாதார உற்பத்தி திறன் குறைவடையாது இருக்கும்;. இதன் காரணமாகவே எமது முதல் திட்டமாக பொலன்னறுவை மாவட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளோம்' என்றார்.

டெட்டோல் வர்த்தக நாமத்தினால் சுகாதாரத்தை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களுள் இவ் வைத்தியசாலை மறுசீரமைப்பு திட்டமும் ஒன்றாகும். இதன் ஓர் அங்கமாக டெட்டோல் வர்த்தக நாமத்தின் மூலம் தாய்மார்களுக்கு தங்கள் சுகாதாரம் மற்றும் சிசு மரணம், தொற்று நோய்களை குறைக்கும் நோக்கில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை வழங்கும் பொருட்டு பட்டறைகள் மற்றும் கிளினிக்குகளை முன்னெடுத்திருந்தன. சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டன. எனவே எதிர்காலத்தில் ஆரோக்கியத்துடன் கூடிய ஆக்கத்திறன் நிறைந்த சமூகமாக அவர்கள் உருவாகுவர். இந் நிகழ்வுகளில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்.

நாட்டின் முன்னணி சுகாதார தயாரிப்பான டெட்டோல், நாட்டில் இடம்பெறும் பேரழிவுகளின் போது தொற்று நோய்கள் பரவக்கூடிய சூழலுக்கு தொடர்ச்சியாக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிப்புற்றவர்களுக்கு சுகாதார தயாரிப்புகளை வழங்குவது மாத்திரமின்றி, சுகாதார பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளையும் வழங்கிவருகிறது. மிக அண்மைக் காலமாக வெள்ளத்தால் பாதிப்படைந்த பொலன்னறுவை மாவட்டத்தில் இத்தகைய திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்திலும் டெட்டோல் வர்த்தக நாமத்தின் மூலம்   நாட்டின் சுகாதார துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பல சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .