2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஜனவரி 18 முதல் யாழ்ப்பாண சர்வதேச விற்பனை கண்காட்சி ஆரம்பம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 11 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விற்பனை கண்காட்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் இந்த கண்காட்சி நிகழ்வு, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு காட்சி கூடங்களை கொண்டமையவுள்ள இந்த விற்பனை கண்காட்சியில், சுமார் 50,000 இற்கும் அதிகமானோர் இம்முறையும் பங்குபற்றுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

இந்த விற்பனை கண்காட்சியின் பிரதான அனுசரணையாளராக டிமோ நிறுவனம் செயற்படவுள்ளதுடன், இணை அனுசரணையாளராக எலிபன்ட் ஹவுஸ் நிறுவனம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .