2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையின் பொருளாதாரம் 2013 – 2014 இல் மறுமலர்ச்சியடையும் – ஆசிய அபிவிருத்தி வங்கி

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2013ஆம் ஆண்டில் 5.8வீதம் வளர்ச்சியடையும் எனவும் 2014இல் 7.2வீத வளர்ச்சியையும் காண்பிக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த வெளியீடான ஆசிய அபிவிருத்தி மேற்பார்வை 2013 நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டை பொறுத்தமட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிர்மாணத்துறையின் துரித வளர்ச்சியின் காரணமாகவும் சேவைகள் துறையின் வளர்ச்சி காரணமாகவும் உறுதியான நிலையில் அமைந்திருந்தது.

சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் இறுக்கமான நாணயக் கொள்கைகளின் காரணமாக மெதுவாகவே இடம்பெற்றிருந்தது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆடைத்தொழில்துறை வீழ்ச்சியை எதிர்கொண்டிருந்தது. இறுக்கமான நாணயக் கொள்கைள் மற்றும் உயர் வரிகள் போன்றன வெளிநாட்டு இறக்குமதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

இலங்கையின் வரவுசெலவு திட்டத்தின் துண்டுவிழும் தொகையை சீர்செய்ய இலங்கையின் பொருளாதார கொள்கை வகுப்பாளர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் சிறந்த வரி அறவீட்டு முறைகளை பின்பற்ற வேண்டிய நிலை காணப்படுவதுடன் வரி திரட்டும் அமைப்பை விஸ்தரிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0

  • b.dhanushan Monday, 30 June 2014 04:24 AM

    எனக்கு மேலும் தகவல்கள் தேவைப்படுகின்றன

    Reply : 0       0

    shahusain Tuesday, 10 February 2015 08:24 AM

    good

    Reply : 0       0

    shahusain Tuesday, 10 February 2015 08:24 AM

    good

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .