2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

நாட்டின் 50% தேசிய வருமானம் மேல்மாகாணத்திலிருந்து கிடைக்கிறது: சிங்கர் தலைவர்

A.P.Mathan   / 2013 மார்ச் 25 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தேசிய வருமானத்தில் 50% மேல்மாகாணத்தில் வசிப்பவர்களின் மூலமாகவே நாட்டுக்கு கிடைத்து வருவதாக சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் ஹேமக அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சிங்கர் நிறுவனத்தின் 2012ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆண்டறிக்கையில் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கான கருத்துப்பகுதியிலேயே அவர் இந்த கருத்தை முன்வைத்திருந்தார்.

தொடர்ந்தும் தமது நிறுவனம் மேல் மாகாணத்தில் வசிப்பவர்களின் அதிகளவு கவனத்தை ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், ஏற்கனவே மேல்மாகாணத்தின் பிரதான நகரங்களில் தமது காட்சியறைகளை தாபித்துள்ளதாகவும், சிங்கர் மெகா, சிங்கர் ஹோம்ஸ் போன்ற பாரிய விற்பனையகங்களை தாபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தென், மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களும் துரித கதியில் வளர்ச்சியடைந்து வருவதாகவும், அனைத்து பகுதிகளிலும் தமது விற்பனையகங்களை வியாபித்து வருவதாகவும் ஹேமக அமரசூரிய தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .