2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

புதிய மாணவர்களை வரவேற்கும் CAHM மற்றும் SLIIT

A.P.Mathan   / 2013 ஜனவரி 11 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


CAHM மற்றும் SLIIT கடந்த 7ஆம் திகதி தமது கல்வியை ஆரம்பித்த மாணவர்களுக்கு வரவேற்பளித்தது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் சுற்றுலாத்துறை மற்றும் உபசரிப்பு பட்டப்படிப்பினை தொடரவுள்ள இம்மாணவர்களுக்கு தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு இவ் அறிமுக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. CAHM மற்றும் SLIIT நிலையங்கள் சர்வதேச ரீதியில் உபசரிப்பு கற்கைகளை வழங்குவதில் முன்னணியில் திகழும் William Angliss கல்வி நிலையத்துடன் இணைந்து சர்வதேச தரத்திற்கமைவான பல உபசரிப்பு கற்கைநெறிகளை வழங்கவுள்ளது.

CAHM மற்றும் SLIIT கல்வி நிலையமானது முதல் அரையாண்டிற்கான புதிய விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேலதிக தகவல்களுக்கு www.cahm.lk இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள்.

William Anglissஆல் நடாத்தப்படும் பட்டப்படிப்பானது 4 வருட கற்கை நெறிகளை கொண்டது. இதன் முதல் கட்டத்தில் அதாவது அரை ஆண்டு கற்கை மூலம் Certificate 111யை முடித்து, மாணவர்கள் படிப்படியாக ஒவ்வொரு மட்டத்தையும் தொடர்ச்சியாக கற்றுக் கொள்ளலாம். மூன்றாவது ஆண்டில் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி சம்பளத்துடன் வழங்கப்படும்.

பயிற்சிக்காலம் முடிந்தவுடன் மாணவர்களின் செயல்திறன் கருதி இறுதி ஆண்டில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ பட்டப்படிப்பினை முடித்துக் கொள்ளலாம். மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள ஷிப்னாஸ் நஸார் 077 0070 109 அல்லது shifnaz@cahm.lk என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளவும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .