2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வட, கிழக்கில் சுற்றுல்லா துறையை மேம்படுத்த பிரித்தானியா உதவும்: அலிஸ்டர் பர்ட்

Super User   / 2013 பெப்ரவரி 04 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் சுற்றுல்லா துறைiயை மேம்படுத்த  பிரித்தானியா உதவும் என தெற்காசிய நாடுகளுக்கான பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்தார்.

இதற்கான சகல நடவடிக்கைகளையும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவராலயம் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அமைச்சர் அலிஸ்டர் பர்ட் இலங்கை சுற்றுல்லா மற்றும் முதலீட்டு சம்மேளத்தின் தலைவர் ஏ.எம்.ஜஃபரை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுல்லா துறையினை மேற்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களை சம்மேளத்தின் தலைவர் ஏ.எம்.ஜஃபர் அமைச்சரிடம் தெளிவுபடுத்தினார்.

இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதில அமுனுகம மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .