2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

2012இல் இலங்கை தேயிலை துறை எதிர்கொண்ட சவால்களும் சாதனைகளும்

A.P.Mathan   / 2013 ஜனவரி 04 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ச.சேகர்)

2012ஆம் ஆண்டில் இலங்கை தேயிலைத் துறை பல சவால்களையும், சில சாதனைகளையும் நிலைநாட்டியிருந்தது. 2012ஆம் ஆண்டின் சராசரி ஏல விற்பனை விலையாக கிலோ ஒன்றுக்கு 391.46 ரூபா பதிவாகியிருந்தது. இது 2011ஆம் ஆண்டில் 359.68 ஆக பதிவாகியிருந்தது.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை ரூபாவின் பெறுமதி மிதக்கவிடப்பட்டதை தொடர்ந்து, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதன் பிரதிபலிப்பாகவே இந்த விலை அதிகரிப்பு நிகழ்ந்திருந்தது.

இதேவேளை 2012 நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் மொத்த தேயிலை உற்பத்தி அளவு 299.63 மில்லியன் கிலோகிராமாக அமைந்திருந்தது. 2011ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் இந்த அளவு 31.82 மிலலியன் கிலோ கிராம்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேயிலை உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் நிலவிய வரட்சியான காலநிலையின் காரணமாக தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் போன்ற காரணங்களினால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது.

ஆயினும் 2013ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேயிலை சந்தைவாய்ப்புகள் சீரானதாக காணப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்பட்ட போதிலும், உற்பத்தியை பொறுத்தமட்டில் காலநிலை மாற்றங்களின் காரணமாக சவால்கள் நிறைந்ததாகவே அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டுடன்படிக்கை கைச்சாத்திடலும் 2013ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .