2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

2012ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தியில் சற்று வீழ்ச்சி

A.P.Mathan   / 2013 ஜனவரி 23 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2012ஆம் ஆண்டு இலங்கையின் தேயிலை உற்பத்தி சற்று வீழ்ச்சியடைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டின் மொத்த தேயிலை உற்பத்தி 326.3 மில்லியன் கிலோகிராமாக பதிவாகியிருந்தது. 2011ஆம் ஆண்டில் 327.6 கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தை பெறுத்தமட்டில், 25.99 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. 2011ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் இந்த பெறுமதி 25.70 மில்லியன் கிலோகிராமாக அமைந்திருந்தது. 2012இல் இந்த பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கு பிரதான காரணியாக, தேயிலை உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் நிலவிய சீரற்ற காலநிலையை தேயிலை உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .